ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிப்பு வந்தால் தற்போதைய ஆளும் தரப்பிலிருந்து சஜித் (Sajith Premadasa) தலைமையிலான கூட்டணியில் 45 பேர் இணைவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சக்களின் மொட்டுக் கூட்டணியில் போட்டியிட்டால் தோல்வி கிடைக்கும் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் சஜித் கூட்டணியில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
67 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க இலங்கை தீர்மானம்
ஜனாதிபதித் தேர்தல்
இவ்வாறு இணையும் அந்த 45 பேரில் தற்போதைய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவார்கள் என்பதுடன் அதற்கான கலந்துரையாடல்களும் தற்போது திரைமறைவில் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் கள நிலைமை மாறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாடாளுமன்றத் தேர்தல் அல்லாமல் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்தால் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) இணைவார்கள் என்று கூறப்படுகின்றது.
வடக்கில் சூடு பிடித்துள்ள தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை
மட்டக்களப்பில் கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் கைது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |