Home இலங்கை அரசியல் 10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு இன்று

10ஆவது நாடாளுமன்றத்தின் முதல் விவாத அமர்வு இன்று

0

நாடாளுமன்றம் இன்றைய தினம் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இன்றைய தினம் முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.

விவாதங்கள்

இந்த விவாதங்கள் முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெறவுள்ளன.

இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version