அரசாங்கத்தின் முடிவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதாயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டி.டபிள்யூ.
குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆறு கட்சித் தலைவர்கள்
ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 499 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமாரும் ஓய்வூதியத்தை
இழக்கு உள்ளனர்.
ஓய்வூதியத்தை நிறுத்தும் ஒரே நாடு
அவர்களில் 150 பேர், கணவனை இழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
மனைவிமார்கள் என ஓய்வற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளர்
பிரேமசிறி மானகே கூறியுள்ளார்.
உலகில் ஓய்வூதியத்தை நிறுத்தும் ஒரே நாடு இலங்கை என்றும், இது ஒரு மனித
உரிமை மீறல் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.