Home இலங்கை குற்றம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதற்றம்.. வெளியான பரபரப்பு காணொளி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதற்றம்.. வெளியான பரபரப்பு காணொளி!

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், ஒரு சவுதி அரேபிய பயணி விமான ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் பதற்றமான சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது. 

சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த காணொளி, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி, ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266இல் நடந்த சம்பவத்தை காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

தாக்கிய பயணி  

அந்த நேரத்தில், பயணிகள் ஆசன பட்டிகளை அணிந்துகொண்டு இருக்க வேண்டும், ஆனால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குறித்த சந்தேக நபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதன்போது, விமான ஊழிய குழுவினர் தலையிட்டபோது, ​​பயணி ஆக்ரோஷமாக மாறியதாகவும் இதன் விளைவாக மற்ற பயணிகள் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் குறித்த மோதலைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version