Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணம் – பெங்களூர் விமான சேவை – வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – பெங்களூர் விமான சேவை – வெளியான தகவல்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – பெங்களூர் சேவையை முன்னெடுப்பது மற்றும் உள்ளூர் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (21.01.2025) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் சேவைகளை முன்னெடுப்பதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமான சேவை

பயணிகளின் தேவைப்பாடு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்குமாறு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், தற்போது சேவையை முன்னெடுக்கும் இண்டிகோ விமான சேவை நிறுவனம் சென்னை – யாழ்ப்பாணம் சேவைக்கு மேலதிகமாக பெங்களூர் – யாழ்ப்பாணம் சேவையை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதாகவும் இதன்போது அபிவிருத்திக்கான நிதி மூலம் தொடர்பில் இறுதி செய்யலாம் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version