Home இலங்கை அரசியல் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை நீக்குவது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (21.03.2025) உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியக் கொடுப்பனவு 

மேலும், தற்போது 1 மில்லியன் ரூபாயாக காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதித் தொகை 250,000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுமெனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

எனினும் தமக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் வேண்டாம் என எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/JxMPO85h7mQ

NO COMMENTS

Exit mobile version