ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மிக விரைவில் அரசாங்கத்திற்கு கொண்டு வருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விசுவாசமான கட்சிகள் அறிவித்திருந்தன.
அரசாங்கத்தில் இருந்து விலகவும் தயார்
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தமது கட்சி தடையாக இருந்தால், அரசாங்கத்தில் இருந்து விலகவும் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே, இனியும் தாமதிக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்திற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.