Home இலங்கை குற்றம் போலி பொலிஸ் அடையாள அட்டையுடன் சந்தேக நபர் கைது

போலி பொலிஸ் அடையாள அட்டையுடன் சந்தேக நபர் கைது

0

சிலாபம் – மாரவில பகுதியில் போலியான பொலிஸ் அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (4) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் மாரவில பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது சிலாபம் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேக நபர் தான் ஒரு பொலிஸ் அதிகாரி என்று கூறி தனது அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், அடையாள அட்டை தொடர்பான சந்தேகங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை நடத்தியதில், சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் போது சேவையை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version