இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடந்த ஜனவரியிலும் அறிவித்திருந்தது.
அநுரவின் இந்திய விஜயம்
எனினும், இதற்கான அதிகாரபூர்வ திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
கடந்த வருடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதல் வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
