Home இலங்கை அரசியல் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு…! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு…! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது

குறித்த மனுவை இன்று (28) உயர் நீதிமன்றம் 50,000 ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை தொடர்பில் சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92வது சரத்தை மீறுவதாகவும் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இதன்போது ஆட்சேபனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

Source: https://ibctamil.com/article/petition-challenging-president-ranil-dismissed-1724836793

NO COMMENTS

Exit mobile version