ஜனாதிபதித் தேர்தலுக்காக நடத்தப்படும் தற்காலிக கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்தைத் தவிர வேறு யாருடைய புகைப்படத்தையும் காட்சிப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தந்த கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் மற்றும் வாக்குச் சின்னம் மாத்திரமே சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காட்சிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு அறிவிப்பு
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படத்திற்கு மேலதிகமாக மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஏனையவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
39 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் ஒரு மாவட்ட அலுவலகம் என ஒரு தொகுதிக்கு ஒரு அலுவலகம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.