Home இலங்கை அரசியல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: அரசாங்கத்தை விமர்சிக்கும் விஜித ஹேரத்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: அரசாங்கத்தை விமர்சிக்கும் விஜித ஹேரத்

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம் அவர்களின் வசிப்பிடங்களைக் கிராமங்களாக மாற்ற முயல்கிறது என தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

கொட்டகலை (Kotagala) நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கிவிட்டு வேதனத்தை அதிகரிக்கவில்லையென பெருந்தோட்ட நிறுவனங்கள் மீது அரசாங்கம் பழிபோடுகின்றது.

சர்வஜன வாக்கெடுப்பு

சட்டத்தினூடாக வேதனத்தை மாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களால் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது.

அதற்கான திருத்தங்களைக் கொண்டுவராமல், தற்போது அவசியமற்ற 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை ஜனாதிபதி கொண்டுவந்துள்ளார்.

அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு பல கோடி ரூபாவை செலவிட வேண்டும்.

அந்த பணத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்க முடியும்.

அரசாங்கத்தினால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version