Home அமெரிக்கா பைடனின் திடீர் முடிவு குறித்து ட்ரம்ப் வெளியிட்ட கருத்து

பைடனின் திடீர் முடிவு குறித்து ட்ரம்ப் வெளியிட்ட கருத்து

0

அமெரிக்க வரலாற்றின் மோசமான ஜனாதிபதியாக ஜோ பைடன் (Joe Biden) வெளியேறுவதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald trump) கூறியுள்ளார்.

ஜோ பைடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், ட்ரம்ப் இதனை அமெரிக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புதிய வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹரிஸை (Kamala Harris) பைடன் ஆமோதித்துள்ள போதிலும், இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

புதிய வேட்பாளர்

எனினும், கமலா ஹரிஸ் புதிய வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால் அவரை வெற்றி கொள்வது பைடனை வெற்றி கொள்வதை விட இலகுவானது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

  

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட அதிகாரிகளான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா (Barack Obama) மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையிலேயே, ஜோ பைடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு புதிய வேட்பாளராக கமலா ஹரிஸை (Kamala Harris) ஆமோதித்துள்ளார்.   

 

மேலும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version