Home இந்தியா இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi)பதவியேற்பு விழா
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் 8ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பாஜக வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

மோடியின் பதவியேற்பு

கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு நிறைவு பெற்ற பிறகு பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமைக்குள்அமைச்சுக்களுக்கானபங்கீட்டை இறுதி செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

எனவே, சனிக்கிழமைக்குள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை மோடி பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளையும், ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பாஜக மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை: அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஒத்திவைப்பு

அதேபோல், லோக்ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் ஆகியோரும் தலா ஒரு மந்திரி பதவி கேட்கிறார்கள்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் முக்கிய இலாகாக்களை கேட்டாலும், பாரதிய ஜனதா கட்சி 6 முக்கிய அமைச்சகத்தை விட்டுக் கொடுக்க மறுத்துள்ளது.

தொடருந்து, உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 6 துறைகளையும் யாருக்கும் ஒதுக்க இயலாது என மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகினார் மோடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version