Home முக்கியச் செய்திகள் வைரலாகும் படங்கள்: செவ்வந்தி கூறிய அந்த வார்த்தை..! காவல்துறையின் முக்கிய முடிவு

வைரலாகும் படங்கள்: செவ்வந்தி கூறிய அந்த வார்த்தை..! காவல்துறையின் முக்கிய முடிவு

0

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, “கணேமுல்ல சஞ்சீவ” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சமூக வலைத்தளத்தில் படங்கள்

ஏற்கனவே, கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கெஹெல்பத்தரை பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டிருந்தார்.

இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவருக்கு பண உதவி 

இதேவேளை, நேபாளத்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட செவ்வந்தி குழுவினர் விமானத்தில் வரும்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் பரவப்பட்டு வருகின்றது.

கொழும்பு நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version