Home முக்கியச் செய்திகள் சிரித்தபடி வந்திறங்கிய செவ்வந்தி: பின் இருந்து ஆட்டிவைக்கும் முக்கிய சூத்திரதாரிகள்

சிரித்தபடி வந்திறங்கிய செவ்வந்தி: பின் இருந்து ஆட்டிவைக்கும் முக்கிய சூத்திரதாரிகள்

0

கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலையில், முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், இரவிலிருந்து சமூக வலைதளங்கள் உட்பட செய்தி தளங்கள் மற்றும் ஊடகங்கள் என அவர் சிரித்தபடி நாட்டில் வந்திறங்கிய புகைப்படம்தான் தொடர்ச்சியாக வைரலாகி வருகின்றது.

இந்த விவகாரம் ஆரம்பித்திலிருந்து பலதரப்பட்ட அதிர்வலையை கிளப்பி இருந்த நிலையில், தற்போது பெரும் சர்சைக்குள்ளாகி உள்ளாகியுள்ளது.

காரணம், வெளிநாடுகளில் யாரும் பெரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் பெரும்பாலும் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னரே கைது குறித்த முழு பின்னணி வெளியில் அறிவிக்கப்படும்.

இருப்பினும், இந்த விடயத்தில் இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் முன்னதாகவே பலதரப்பட்ட விடயங்கள் வெளியாகி இருந்தது.

குறித்த தகவல்கள் பிரபல அரசியல்வாதியொருவரால் ஊடகங்களுக்கு கசித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றவியல் அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதன்பின்பும் பலதரப்பட்ட தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளினால் கசியலாம் என்ற அடிப்படையில் சந்தேகங்கள் எழுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் அவர்களது மேலதிக விசாரணைகளை பெரிதும் பாதிக்கும் என அவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இதனால் ஏற்படபோகும் விளைவுகள், இந்த விசாரணைகளின் அடுத்த கட்டம், அரச தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/cPfuVCWfEZ4?start=789

NO COMMENTS

Exit mobile version