குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அஞ்ச வேண்டாம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் குற்றவாளிகளை இல்லாதொழிப்பது தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று விசேட அதிரடிப்படையினரிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படை பலத்தை அதிகரிக்க நடவடிக்கை
“சரியான விடயங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த அச்சம் கொள்ளத் தேவையில்லை.
சரியான விடயங்களைச் செய்யும் அதிகாரிகளுக்காக குரல் கொடுக்கத் நான் தயாராக தயார்.
குற்றவாளிகளை இல்லாதொழிக்கும் இலக்கின் அடிப்படையில் பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.
இதன்படி குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்கு படைபலம் போதவில்லை என்றால் மேலும் படை பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/police-force-can-shoot-criminals-tiran-1714038362
