Home இலங்கை அரசியல் பாதாள உலகத்தினரிடம் இருந்து பணம் பெறும் பொலிஸார்! குற்றம் சுமத்தும் அரசாங்கம்

பாதாள உலகத்தினரிடம் இருந்து பணம் பெறும் பொலிஸார்! குற்றம் சுமத்தும் அரசாங்கம்

0

சில பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து வழக்கமாக பணம் பெறுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சுனில் வட்டகல, குற்றம் சுமத்தியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில், பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இடமாற்றம் 

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர்.

புலனாய்வு அறிக்கைகளைத் தொடர்ந்து, ருவன்வெல்லவில் கிட்டத்தட்ட முழு பொலிஸாரையும் இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது.

அது மட்டுமல்ல, அவிசாவெல்லவிலும் கூட, பாதாள உலகத்தின் பணம் பொலிஸாரின் கைகளுக்கு செல்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version