Home இலங்கை சமூகம் மாற்று வழியை பயன்படுத்துங்கள்: வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள்

மாற்று வழியை பயன்படுத்துங்கள்: வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள்

0

கொஹுவல சந்தி (Kohuwala Junction) வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமையாலேயே நாளை (15) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது. 

பொதுமக்களிடம் வேண்டுகோள்

அத்துடன்,மேம்பாலம் நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியுனூடாக பயணப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/police-request-drivers-use-alternative-way-colombo-1718333261

NO COMMENTS

Exit mobile version