உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம்
அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த நபர்கள் தங்கள் அடையாளத்தை, உறுதிப்படுத்தாவிட்டால், அவர்களைக்
கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யும் அதிகாரம்
அத்துடன், தலைக்கவசம் அணிந்திருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில்
நடந்து கொள்வோரை கைது செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு என்றும் பொலிஸ்
தரப்பு தெரிவித்துள்ளது.
எனவே சோதனைகளின் போது ஒத்துழைக்குமாறு தனிநபர்களைக் கேட்டுக்கொண்டுள்ள, பொலிஸ்
தரப்பு, அவ்வாறு செய்யத் தவறுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு
உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
