Home இலங்கை அரசியல் வரலாற்றிலேயே சொன்னதை செய்யும் ஒரே அரசாங்கம்: பெருமிதத்தில் ஜேவிபி

வரலாற்றிலேயே சொன்னதை செய்யும் ஒரே அரசாங்கம்: பெருமிதத்தில் ஜேவிபி

0

இலங்கை வரலாற்றில் சொன்னதை செய்யும் ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் என்று ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொது செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், வேறு எந்த அரசாங்கமும் இவ்வாறு செயற்பட்டது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதிகள்

தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சியைப் பிடித்தபோது, ​​பொருளாதாரம் பூஜ்ஜியமாக சரிந்து மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடன்களை அடைக்க முடியாத, மூன்று வேளை கூட சாப்பிட முடியாத ஒரு நாட்டை தனது அரசாங்கம் கைப்பற்றியிருந்ததாகவும் டில்வின் கூறியுள்ளார்.

மேலும், தனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டதாகவும் அன்றிலிருந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.  

you may like this…


https://www.youtube.com/embed/xB4f75QOF_g

NO COMMENTS

Exit mobile version