Home இலங்கை அரசியல் வலுக்கும் ரணில் மற்றும் பிரதமர் ஹரிணியின் முறுகல் நிலை!

வலுக்கும் ரணில் மற்றும் பிரதமர் ஹரிணியின் முறுகல் நிலை!

0

நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களின் பணி எனவும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது பிரதமருக்கானது இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (31) புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயகத்தின் உடையை அணிந்தாலும், இன்னும் அவர்கள் உடல் சரியாகப் பொருந்தவில்லை என்று தெரிவதாகவும் என்று ரணில் விக்ரமசிங்க அங்கு கூறியுள்ளார்.

உதய செனவிரத்ன அறிக்கை

இந்த நிலையில், அழுக்கான ஆடைகளை தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகத்தின் ஆடைகளை அணியுங்கள் என ஜனாதிபதி நாட்டு ஊடகங்களுக்கு கூறியுள்ள போதிலும் பத்தரமுல்லை செளரதன தேரருக்கு என்ன புரிகின்ற விடயம் கூட நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சருக்கு புரியவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விமர்சித்துள்ளார்.

மேலும், உதய செனவிரத்ன அறிக்கை பொய்யான அறிக்கை என பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், பிரதமர் ஒருவர் பொய்யான அறிக்கையை வெளியிட்டால் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற மரபு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version