Home இலங்கை அரசியல் சஜித் அணிக்குள் வெடித்தது பூகம்பம் : தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்

சஜித் அணிக்குள் வெடித்தது பூகம்பம் : தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்

0

உள்ளுராட்சிசபைகளுக்கான ஆசனபங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக சஜித்(sajith premadasa) அணிக்குள்(sjb) உட்கட்சி மோதல் வலுத்துள்ள நிலையில் பலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தோட்டை தொகுதி அமைப்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே, தொகுதி பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகல்

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சம்பிக்க விஜேவர்தனவும் பதவி விலகியுள்ளார்.

மாத்தளை தொகுதி அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகாரவும் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகல் கடிதங்களை ஏற்பாரா சஜித்..!

கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தாமதங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மேலும் பலர் தங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகுவதற்கான கடிதங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்தார்

எனினும், இவர்களின் பதவி விலகல் கடிதங்களை கட்சி தலைவர் ஏற்பாரா என்பது பற்றி இன்னும் தகவல் வெளியாகவில்லை. 

NO COMMENTS

Exit mobile version