Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை

முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை

0

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை
ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் பிரதேச வாசிகள், பொலிஸார் மற்றும் வன
ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாளை(25) வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானை
உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

சட்ட நடவடிக்கை

மின்சாரம் தாக்கியே
குறித்த யானை உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கால்நடைகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர் குறித்த பகுதிக்கு நாளை(25) சென்று
பிரேத பரிசோதனை மேற்கொண்டு யானை உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறிய
உள்ளதுடன் சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள உள்ளார். 

NO COMMENTS

Exit mobile version