Home சினிமா மதுரை மாநாட்டில் நடிகர் விஜய்யின் தெறிக்கும் பேச்சு… பாஜக, திமுகாவை கிழித்த தளபதி

மதுரை மாநாட்டில் நடிகர் விஜய்யின் தெறிக்கும் பேச்சு… பாஜக, திமுகாவை கிழித்த தளபதி

0

விஜய்

ஒரு நடிகராக கலக்கிவந்த விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்து இப்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

முதல் மாநாட்டை தொடர்ந்து இன்று ஆகஸ்ட் 21, மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநாடு படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. மேடைக்கு வந்த விஜய் மதுரையில் கூடிய கூட்டத்தை கண்டு கொஞ்சம் கண் கலங்கினார் என்றே கூறலாம்.

தற்போது மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது, விஜய்யின் பேச்சும் வெறித்தனமாக இருந்தது.

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் விஜய் பேசும்போது, சினிமா, அரசியல் இரண்டிலும் என்னுடைய தலைவர் எம்ஜிஆர், அவரைப் போலவே வாழ்ந்தவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டினார். கொள்கை எதிரி பாஜக, திமுக அரசியல் எதிரி, திமுக-பாஜகவுடன் மறைமுக கூட்டணியுடன் உள்ளது.

  

இந்தக் கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி வீழ்த்தும். ஊழல், குடும்ப ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சி என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி வீட்டுக்கு அனுப்பும்.

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? என முதலைமச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய விஜய், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது ரெய்டு வந்துவிட்டால் உடனே தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் டெல்லிக்கு ஏதோ மீட்டிங் என கூறி டெல்லிக்கு புறப்படுவதாகவும், அங்கு ஆட்சியில் இருப்பவர்களை ரகசியமாக சந்தித்து டீலிங் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.    

NO COMMENTS

Exit mobile version