Home இலங்கை சமூகம் முடிவை மாற்றியதா அரசாங்கம்! பிரதமருக்கு எதிராகவே எதிரொலி

முடிவை மாற்றியதா அரசாங்கம்! பிரதமருக்கு எதிராகவே எதிரொலி

0

அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைத்து வந்து மாணவர்களை வணங்க வைக்கும் முந்தைய கால அடிமை கலாச்சாரத்திற்கு அரசாங்கத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் துணைபோவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவதில்லை என்ற நல்ல முடிவை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது வருத்தமளிப்பதாக
சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் காலத்தில், அரசியல்வாதிகள் இல்லாமல் பாடசாலை விவகாரங்களை நிர்வகிக்க முடியாத அளவுக்கு ஊழல் நிறைந்த கலாச்சாரம் உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு பிரதமர் மேலும் துணை போவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அனைவரின் பொறுப்பு 

கல்வி அமைச்சர் என்ற முறையில், பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு பிரதமருக்கே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை முறையை அரசியலுக்காக தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பது அனைவரின் பொறுப்பு என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், பாடசாலை கழ்வுகளில் அரசியல்வாதிகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக செப்டம்பர் 26, 2024 அன்று ஒரு விசேட அறிவிப்பொன்றும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

you may like this

https://www.youtube.com/embed/0lsToUs_RD0

NO COMMENTS

Exit mobile version