Home சினிமா அஜித்தின் தீண்டாமை பிரச்சனை உண்மையா?- ஓபனாக நேரில் பார்த்ததை கூறிய பிரபலம்

அஜித்தின் தீண்டாமை பிரச்சனை உண்மையா?- ஓபனாக நேரில் பார்த்ததை கூறிய பிரபலம்

0

நடிகர் அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் டாப் பிரபலம்.

இவர் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களை மாற்றி மாற்றி நடித்து வந்தார். துணிவு படம் தொடர்ந்து அடுத்து விடாமுயற்சி படம் தான் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குறித்து ஒரு சர்ச்சை பரபரப்பாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதுகுறித்து பலரும், நிறைய கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலத்தின் பதிவு

நடிகர் அஜித் Dont Touch Me என தன்னிடம் கூறியதாக யோகி பாபு தெரிவித்ததாக பிரபல பத்திரிக்கையாளர் கூறிய விவகாரம் பெரிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித்தை பேட்டி எடுத்த பிரபல விஜே.விஜயாசாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தை தான் பேட்டி எடுத்தபோது நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், இந்த பேட்டிக்கு வந்த அஜித் அரங்கில் நுழைந்ததும் அங்கு இருந்த கேமிராமேன், உதவியாளர், டிராலி தள்ளுபவர், கலை வடிவம் உதவியாளர், ஆன்லைன் எடிட்டர், அரங்க உதவியாளர், பாதுகாவலர்கள், ஆபீஸ் பாய் என அனைவருக்கும் கை குலுக்கி பேசியதை நான் பார்த்தவன் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version