Home இலங்கை சமூகம் மின்தடையால் ஏற்பட்ட சிக்கல்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

மின்தடையால் ஏற்பட்ட சிக்கல்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

0

ஹட்டன் – பொகவந்தலாவை பகுதியில் மின்பிறப்பாக்கியில் (ஜெனரேட்டர்) இருந்து வந்த புகையை சுவாசித்ததில் சுகவீனமுற்ற நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திடீர் சுகவீனம்

இன்று (09) முற்பகல் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பொகவந்தலாவை பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் மின்பிறப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, குறித்த மின்பிறப்பாக்கியில் இருந்து வந்த புகையை சுவாசித்ததில் கடையில் இருந்த நான்கு ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர் எனவும் அவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version