ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் (Douglas Devananda) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (25) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபாரிசு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது வேண்டியவற்றுள், முன்னுரிமைப்படுத்தப்பட்ட 38 விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அநுரகுமார திஸாநாயக்க
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்தது.
இதன்போது, நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.