நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.
மாற்றங்களுக்கான ஒரு மைல் கல்
இந்தநிலையில், தற்போது நடைபெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் ஜனாதிபதி கல்வி மறுசீரமைப்புத் திட்டம் குறித்து விபரித்து வருகின்றார்.
மேலும், கல்வி சீர்திருத்தத்தில் பாடத்திட்டங்களின் மாற்றத்தை பற்றி சிலர் பேசுகின்றனர்.ஆனால் அதற்கப்பால் முழு கல்வி கட்டமைப்பும் சீர்திருத்தப்படும்.
அது மட்டுமல்ல எமது நாட்டின் சமூக பொருளாதாரத்தின் எதிர்கால மாற்றங்களுக்கான ஒரு மைல் கல்லாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
