Home இலங்கை அரசியல் வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

0

வரலாற்றை மறைக்கவும், மாற்றியமைக்கவும் தற்போதைய அரசாங்கம் முயல்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய (23.06.2025) தினம் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் உந்துதலுடன் கொழும்பு உட்பட வடக்கு – கிழக்குக்கு வெளியே திட்டமிடப் பட்டு தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர்.

இராணுவத்தினரும் காவல்துறையினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

சில சாதாரண சிங்கள மக்கள், தங்களின் நண்பர்களை பாதுகாப்ப தற்காக தங்களால் முடிந்
தளவு, தமிழ் மக்களை மறைத்து வைத்திருக்க வும் உதவியிருந்தனர்.

“தற்போதைய அர சாங்கம் தங்களை சகல சந்தர்ப்பங்களிலும் இன வாதிகள் இல்லை என்று கூறி வருகிறது. எனினும், வடக்கு – கிழக்கு மக்கள் கறுப்பு ஜூலை தினத்தை நினைவுகூரும் இன்றைய தினம் அரசாங்கம் தெற்கில் இருந்து இளைஞர் குழுக்களை வடக்குக்கு அனுப்புகிறது. 

அந்த நினைவு கூரலை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் சகோதரத்துவம்என்ற பெயரில் அரசாங்கம் இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

“ஜே. வி. பி. அரசாங்கத்துக்கு இன வாதம் இல்லை என்றால், இன்றைய தினம் கறுப்பு ஜூலையை நினைவு
கூர்ந்திருக்க வேண்டும். 

இன்றையதினத்தை சகலரும் நினைவுகூரும் தினமாக தற்போதைய அரசாங்கம் மாற்றியமைத்திருக்க வேண்டும். 

எனினும், இதற்கு மாறாக வரலாற்றை மறைக்கவும் மாற்றியமைக்கவும் தற்போதைய அர சாங்கம் முயல்கிறது. உத்தியோகபூர்வ மன்னிப்பு இதுவரையில் கேட்கப்படாத நிலையில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருகிறார்கள் என தெரிவித்தார். 

https://www.youtube.com/embed/47y-VRiZLvk

NO COMMENTS

Exit mobile version