Home இலங்கை அரசியல் ராஜபக்ச குடும்பத்தை தண்டிப்பதில் அநுரவிற்கு தடையாகும் முக்கிய சக்தி

ராஜபக்ச குடும்பத்தை தண்டிப்பதில் அநுரவிற்கு தடையாகும் முக்கிய சக்தி

0

ராஜபக்ச குடும்பத்தில் உள்ளவர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கைது செய்யுமா என்ற வினா எழுந்தால் அது இல்லவே இல்லை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகாவம்சம் என்ற நூலிலே ராஜபக்கர்களுடைய பெயர்கள் பதியப்பட்டுள்ளன.

அவ்வாறு எழுதப்பட்ட மனிதர்களுடைய பெயர்களை, அவர்களது வெற்றி வீரர்களை கைது செய்ததான ஒரு வரலாற்றை ஒரு போதும் பதிவு செய்ய மாட்டார்கள்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இலாபத்திற்காக, ஆட்சியை தொடர்ந்து தக்கவைப்பதற்காக எவ்வாறான விடயங்களையும் கூறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையினுடைய அரசியல் போக்கும், ராஜபக்ச குடும்பம் தொடர்பில் அநுரவின் நிலைப்பாடு குறித்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

 

NO COMMENTS

Exit mobile version