Home இலங்கை அரசியல் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர அஞ்சலி

மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர அஞ்சலி

0

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று(15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

மலர் அஞ்சலி

இதனையடுத்து, சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார். 

மேலும், சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்ற ஜனாதிபதி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதன்போது, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டுள்ளனர். 

மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர அஞ்சலி | President Anura S China Visit  

GalleryGallery

NO COMMENTS

Exit mobile version