Home இலங்கை அரசியல் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

0

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தனது அடுத்த வெளிநாட்டு விஜயமாக அமெரிக்கா(us) செல்லவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா(k.d. lalkantha) தெரிவித்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ஜப்பானுக்கான(japan) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, பிராந்திய வல்லரசுகளாக இந்தியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் பயணம் 

உலகின் அனைத்து நாடுகளுடனும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த விஜயங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version