நெஞ்சத்தை கிள்ளாதே
ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று நெஞ்சத்தை கிள்ளாதே.
இந்தத் தொடரில் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் ஜோடியாக நடித்து வந்தார்கள்.
ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கி 6 மாதங்களே ஆகிறது.
இந்த நேரத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே தொடரை திடீரென நிறுத்தியுள்ளார்கள், சீரியல் குழுவினரின் இந்த முடிவை ரசிகர்களும் எதிர்ப்பார்க்கவே இல்லை.
காரணம் என்ன
இந்த தொடர் நிறுத்தப்பட்டதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் நிஜமாகவே தொடர் முடிவுக்கு கொண்டு வர என்ன காரணம் என்பதை இந்த சீரியலின் நாயகன் ஜெய் ஆகாஷ் தனது இன்ஸ்டாவில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை காரணமாகவே தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாம். இதோ அவர் பேசிய வீடியோ,