ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
பிரதமர் உள்ளிட்டோருடன் சந்திப்பு
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று இதனை தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.