Home இலங்கை அரசியல் இலங்கை ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்

இலங்கை ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake), பிரிக்ஸ் குடும்பத்தில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர் பக்கீர் அம்சா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஒக்டோபரில் இலங்கையின் ஜனாதிபதி இந்த கடிதத்தை ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம்

எனினும் இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியின் பதில் குறித்து தூதுவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நிலைக்கு விண்ணப்பிக்க கொழும்பு முடிவு செய்துள்ளதாக கடந்த ஒக்டோபரில் அறிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கட்டமைப்பிற்குள், விரிவான பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதன் மூலம் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்காக, இந்த சங்கத்தை ஒரு பயனுள்ள கூட்டாண்மையாக இலங்கை கருதுவதாக அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த டிசம்பரில், பிரிக்ஸ் குழுவில் இணைவதற்கான கொழும்பின் முயற்சியை ஆதரிக்குமாறு இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version