பரிசோதனை முயற்சி ஒன்றை செய்து பார்க்கப் பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என்பதால் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்பதை எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் தீர்மானிக்க வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சிக்கல்கள் உருவாகியுள்ள இவ்வேளையில் மேலும் பல சோதனைகளுக்குச் சென்று இன்னொரு தடவை கேட்டு சாப்பிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தொடர்வதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளச்செய்ய முடியும்.
பரிசோதனை முயற்சி ஒன்றை செய்து பார்க்கப் பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என்பதால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.