எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலால் மட்டுமே முடியும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். கடந்த காலம் அனைவருக்கும் தெரியும்.
முன்னாள் ஜனாதிபதி அனைத்து துறைகளையும் அழித்தார்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரே நாம் நல்லதொரு நிலையை அடைந்துள்ளோம்.
குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அதனால்தான் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க அனைத்து மக்களும் தயாராக உள்ளனர். எனவேதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எமது கட்சி ஆதரவளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.