Home இலங்கை அரசியல் சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடிய சரத் பொன்சேகா

சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடிய சரத் பொன்சேகா

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka), கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக சாடியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் ஆற்றிய உரையில் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.

”நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

சஜித்திற்கு ஆதரவு

தாம் உரையாற்றுவதற்கு நேரம் கோட்ட போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சஜித்திற்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.

எனினும் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான, தமக்கு நேரத்தை ஒதுக்கித் தந்தனர்.

மூன்று அமர்வுகளில் தாம் ஒரு நாள் மட்டுமே பேசினேன். சிலர் நாள் தோறும் அரை மணித்தியாலத்திற்கு மேல் பேசுகின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் தாம் களவாடியதில்லை.

கசீனோ சூதாட்ட உரிமையாளர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை விநியோகம் செய்ததில்லை.

பொருட்களை விநியோகம் செய்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அரசியல்வாதிகள் வழங்கும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளுமாறும், வாக்குகளை அவர்களுக்கு அளிக்க வேண்டாம் எனவும் தாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வழங்கிய உறுதிமொழி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.” என்றார். . 

NO COMMENTS

Exit mobile version