Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவும் – நாமல் ராஜபக்சவும் ஒரே விமானத்தில் பயணம்

ஜனாதிபதி அநுரவும் – நாமல் ராஜபக்சவும் ஒரே விமானத்தில் பயணம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும், ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

ஜனாதிபதி திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அதிகார விஜயமொன்றை மம்றகொண்டு மாலே நகருக்குச் சென்றுள்ளார்.

திருமண விழா

அதே நேரத்தில், நாமல் ராஜபக்ச, அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க மாலைத்தீவிற்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் கொழும்பு முதல் மாலே வரை பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 101 இன் வணிக (Business Class) பிரிவில் இருந்தனர்.

இந்த தற்செயலான சந்திப்பு அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.

இதேவேளை, நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version