Home இலங்கை அரசியல் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை! சிறிநேசன் ஆதங்கம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை! சிறிநேசன் ஆதங்கம்

0

புரையோடி போயிருக்கின்ற இனப்பிரச்சினை விடயமாகவும், அதற்கான தீர்வு என்ன
அதனை எவ்வாறு கையாள்வது, அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர
தனது சிம்மாசன உரையில் சுட்டிக்காட்டியிருக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிம்மாசன உரையின் போது முற்போக்கான கருத்துக்கள் கூறப்பட்டதை மறுக்க முடியாது.

மேலும் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றபோது நடைபெற்றபோது, அதற்கான நடவடிக்கைகள்
எடுப்பதும் சட்டவாட்சி மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினையும்
அவர் தெளிவாக கூறியிருந்தார்.

இந்த கருத்துக்களை பொதுவாக நாங்கள் ஏற்றுக்
கொள்கின்றோம். இருந்த போதிலும் அங்கு காணப்பட்ட குறைபாட்டை
குறிப்பிட்டாக வேண்டும்.

புரையோடி போயிருக்கின்ற இனபிரச்சினை விடயமாகவும், அதற்கான அதற்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி அந்த
இடத்தில் சுட்டிக்காட்டி இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்…..

NO COMMENTS

Exit mobile version