Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த 6 மாத காலப்பகுதி மிகவும் சவாலான காலப்பகுதியாக இருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாரத் அருள்சாமி (Bharat Arullsamy) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ”சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)அதிகாரிகளுக்கிடையிலேயான ஒப்பந்தத்திற்கு இணக்கப்பாடு வந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட நிதி உதவி நிறைவு செய்யப்பட்டு நான்காம் கட்ட நிதி உதவிக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையகூடிய காரணியாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதத்திற்கு இடையிலான காலப்பகுதி இந்த அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் உறுதியளித்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க…..



https://www.youtube.com/embed/W5QntjVMGiU

NO COMMENTS

Exit mobile version