Home இலங்கை அரசியல் கருணா எனும் பெயரை தந்தவர் தலைவர் பிரபாகரன்: முரளிதரன் பெருமிதம்

கருணா எனும் பெயரை தந்தவர் தலைவர் பிரபாகரன்: முரளிதரன் பெருமிதம்

0

கருணா என்னும் பெயரை எனக்கு தந்தவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனாகும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதனை நான்
ஒருபோதும் மறக்கமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன்,

“தலைவருக்கும் கருணா அம்மானுக்கும் இடையில் நடைபெற்றது ஒரு சிறிய
பிரச்சினை. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட பிரச்சினை. அதனை
வைத்துசிலர் பூதாகரமாக்கிவருகின்றனர்.

தலைவரின் இழப்பு என்பதை இன்று நாங்கள்
நினைத்துப் பார்க்கும்போதும் அது ஒரு வேதனையான விடயமாக இருக்கின்றது. அவரின் உடலை
நான் சென்றே அடையாளப்படுத்தினேன்.

அது பாரியவேதனையான விடயமாகும்.
இன்று எத்தனையோ பேர் முதலைக்கண்ணீர் வடித்துக்கொண்டு தலைவரின் பெயரை விற்று
வெளிநாடுகளில் நிதிகளையும் வசூலித்துக்கொண்டு வாழ்ந்துவருகின்றார்கள்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“எந்த ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் – முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்டவேண்டும், இன்று சர்வதேச
சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான
மக்கள் ரணிலையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version