Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய அநுர!

முன்னாள் ஜனாதிபதிகளை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய அநுர!

0

மூன்று வேளை உணவு உட்கொள்ளாத மக்கள் வாழும் சூழலுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அளவுக்கு மீறிய சிறப்புரிமைகள் எதற்கு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் வரவுசெலவு திட்ட உரையை நிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதிகளின் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளை நாம் அகற்றியுள்ளோம்.

மக்களின் ஆணைக்கு 

சிலர் இதை வலியாக உணரலாம் இருப்பினும் நாம் மக்களின் ஆணைக்கு அமைவாகப் பணியாற்றுகின்றோம்.

வேறு நாடுகளில் முன்னால் ஜனாதிபதிகளுக்கும் பிரதம அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் சிறப்புரிமைகள் பற்றி சிலர் வாதிடுகின்றனர் எனினும், அந்நாடுகள் எமது நாட்டைப்போன்று வங்கிரோத்து நிலைக்கு சென்றவையல்ல.

எமது நாட்டை துரதிஷ்டவசமாக வங்குரோத்தடையச் செய்தனர், பிள்ளைகள் பாடசாலைகளைக் கொண்டிராத ஒரு நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் ஒருவேளை கூட உணவின்றி உறங்கச் செல்லும் ஒரு நாட்டில் தமது உயிர்களைக் காப்பதற்கு மருந்து வாங்குவதற்கு வழியின்றி மக்கள் வருந்தும் ஒரு நாட்டில் மற்றும் அப்பாவி இளைஞர்கள் தொழிலின்றி வருந்தும் ஒரு நாட்டில் சிறப்புரிமைகளை தொடர்ந்தும் அனுபவிப்பது முன்னால் ஜனாதிபதிகளுக்கு நெறிமுறையொன்றாக அமையுமா ?

பொதுமக்கள் 

அதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பது சாத்திமா ?

பிரசைகளுக்கும் பொதுமக்கள் பிரதி நிதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் தீர்க்கமாக மாற்றியமைத்துள்ளோம்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு மேலானவர்கள் அவர்களை அடிமைகளாக நடாத்துபவர்கள் அரசர் அல்லது மாண்பு மிக்க தெய்வங்கள் என்ற அந்தஸ்த்தை மாற்றியுள்ளோம்.

அவர்கள் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளுக்கு தகுதியான ஒருவரல்ல என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளோம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஒருவராக அவர் இருக்கலாம்.

குறுகிய காலப்பகுதி

இருப்பினும் சாதாரண மக்களைப் போன்று அவர் சாதாரணமான ஒருவரே என்பதனை இக்குறுகிய காலப்பகுதியினுள் சமூகத்தில் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இது நாம்வென்றெடுத்த சாதனையொன்றாகும், அதனை மேலும் உறுதி செய்வதே எமது இலக்காகும்.

இருப்பினும் நாம் அந்த உதாரணத்தை நிறுவியுள்ளோம், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உட்கொள்ளாத மக்கள் மூன்று ஊட்டச்சத்து உணவுகளை பெறக்கூடிய பொருளாதாரமொன்றை உருவாக்குவதும், ஒவ்வொரு பிள்ளையும் கல்வியைப் பெறும் சூழலை உருவாக்குவதும், ஒவ்வொருவருக்கும் புகலிடம் வழங்குவதும் மற்றும் ஒவ்வொரு பிரஜைக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதும் எமது ஏகக் குறிக்கோளாகும்” என அவர் தெரிவித்துள்ளார். 

you may like this 


https://www.youtube.com/embed/mU7Yj2dd3s8

NO COMMENTS

Exit mobile version