Home இலங்கை அரசியல் ரணிலின் உரையை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

ரணிலின் உரையை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உரையை வரவேற்று நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டதாக தெரியவருகின்றது.

பண்டாரகம (Bandaragama), மாலம்பே மற்றும் காலி போன்ற இடங்களில் அதிகளவில் பட்டாசு கொளுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) உள்ளிட்டவர்கள் பாற்சோறு பரிமாறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள்

நாட்டின் பொருளாதார நிலைமைகள், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தகவல் வெளியிட்டிருந்தார்.

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் (china exim bank) நேற்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அது அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தி என்று தெரிவித்த அதிபர், சிலர் அதிபர் பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் தான் நாட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party) ஆதரவாளர்கள் இவ்வாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version