Home முக்கியச் செய்திகள் மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க

மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்ற அதிபர் ரணில் விக்ரமசிங்க

0

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

மன்னார்(Mannar) ஆயர் இல்லத்தில் இன்று(16) காலை 10 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

கலந்துரையாடலை மேற்கொண்ட அதிபர் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.

ஆயரை சந்தித்த ரணில்

சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்(
K. Kader Masthan), மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார் , முன்னாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயரினால் ரணிலுக்கு மாதா சொரூபம் ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

Source: https://ibctamil.com/article/president-ranil-wickremesinghe-met-mannar-bishop-1718524078?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version