ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக அவர், எதிர்வரும் 22ஆம் திகதி
அமெரிக்கா பயணிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
பேச்சுவார்த்தை
இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அமெரிக்க விஜயத்தையடுத்து ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இம்மாதம் 26 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
