Courtesy: Sivaa Mayuri
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு(Gotabaya Rajapaksa) ஏற்பட்ட கதியை எதிர்கொண்டிருப்பார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) ஆலோசகர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரேமதாச, அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்சவை விட விரைவில் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சஜித்துக்காக உழைத்த ஐதேகவினர்
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினர் பலர் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்ற பிரேமதாசவின் குற்றச்சாட்டை ஆசு மாரசிங்க இதன்போது மறுத்துள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அவருக்காக ஐக்கிய தேசியக்கட்சியினர் 24 மணிநேரமும் உழைத்தனர்.
பிரேமதாச மக்களை நேருக்கு நேர் சந்திக்கும் பயணத்தின் போதும் அவர் முன்னிலைப்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தாம் உட்பட்டவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் ஆசு மாரசிங்க சுட்டிக்காட்டினார்.