Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்

0

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பணிகள் இன்று (16) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) குறிப்பிட்டுள்ளது.

அரச அச்சக திணைக்களம்

இந்த நிலையில், ஒற்றை நிரல் கொண்ட வாக்குச் சீட்டானது 27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், வேட்பாளர்களின் பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக திணைக்கள (Department of Government Printing) தகவல்கள் தெரிவிக்கின்றது.

செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் நேற்றைய தினம் (15) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version